Posts

Showing posts from May, 2009

World tobocco Day...

Make 100% Non tobacco Environment....Today Anti Tabacco Day Neither ventilation nor filtration, alone or in combination, can reduce exposure levels of tobacco smoke indoors to levels that are considered acceptable, even in terms of odor, much less health effects (see Myths below). The evidence demands an immediate, decisive response, to protect the health of all people. WHY GO SMOKE-FREE? Because... Second-hand tobacco smoke kills and causes serious illnesses. 100% smoke-free environments fully protect workers and the public from the serious harmful effects of tobacco smoke. The right to clean air, free from tobacco smoke, is a human right. Most people in the world are non-smokers and have a right not to be exposed to other people's smoke. Surveys show that smoking bans are widely supported by both smokers and non-smokers. Smoke-free environments are good for business, as families with children, most non-smokers and even smokers often prefer to go to smoke-free places. Smoke-free e
Image
மனித வரலாற்றில் இப்படியோர் கொடுமை கருத்துரை சேர்க்கவும்   S Raj , மே 28, 2009 3:14:00 PM IST அன்று வெளியிட்டது  # "இங்கே எங்கு பார்த்தாலும் பிணக் காடாய் கிடக்கிறது' வெள்ளைக் கொடி ஏந்தி சரணடையச் சென்று, துரோ கத்தால் சுட்டுக் கொல்லப் படுமுன் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு பொறுப்பாளர் நடேசன் இறுதியாக உலகோடு பேசிய வார்த்தைகள் இவை. ""இங்கே எங்கு பார்த்தாலும் பிணக்காடாய் கிடக்கிறது!''. மரணத்தின் எஜமானர்கள் நம் மக்களை முற்றுகையிட்டார்கள், சந்தையில் மலிந்த பொருள் போல் அள்ளிச் சென்றார்கள். சிங்களம் தின்ற உயிர் எத்தனை என்ற கணக்குக்கூட இல்லை. நாமறிய நவீன மனித வரலாற்றில் இப்படியோர் கொடுமை வேறெந்த இனத்திற்கும் நடந்ததில்லை. "யுத்தம் முடிந்துவிட்டது, விடுதலைப்புலிகள் இயக்கம் முற்றாக அழிக்கப்பட்டு விட்டது' என இலங்கை அரசு அறிவித்து இன்றோடு பத்து நாட்கள் ஆகின்றன. எனினும் முல்லைத் தீவுக்குச் சென்று வர ஐ.நா. அமைப்புகளுக்கே அனுமதி இல்லை. முல்லைத் தீவை முற்றுகையிட்டது சுமார் ஒரு லட்சம் சிங்கள ராணுவத்தினர். அவர்கள் கடந்த பத்து நாட்களாய் செய்து வரும் வேலை தமிழர்
படிப்போம் வாருங்கள்                இன்றைய சூழ்நிலையில் இயந்திரமான விஞ்ஞான உலகில் கல்லூரிப் படிப்பை முடித்து வேலையில் அமர்ந்தவுடன் அனுதினமும் படிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. ஆனால் நமது முன்னோர்கள் அல்லது பெற்றோர்கள் இன்றளவும் அனுதினமும் அலுவலக வேலையை முடித்துவிட்டு மாலை நேரங்களில் ஊர் பொது நூலகம் சென்று நூல்களை அல்லது அன்றைய செய்திகளை படிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.           இன்றைய சூழ்நிலையில் நமக்கு எல்லா சகல வசதிகளும் வீட்டில் உள்ள கணிப் பொறியிலேயே கிடைக்கிறது. உதாரணமாக, அனைத்து செய்தித்தாள்களும் தங்களது செய்திகளை வலைதளத்தில் இடுகிறது மற்றும் அனைத்து தமிழ்நூல்களும் மின்-புத்தகங்களாக மாறிக் கொண்டே உள்ளன. அனைத்து வசதிகளும் நாம் இருக்கும் இடத்திலேயே ஒருங்கே கிடைக்கப் பெற்றும் நம்மில் பலர் தினமும் படிக்கின்ற பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வது இல்லை.            நண்பர்களே! நாம் மாறுவோம்!! தினமும் குறைந்தது அரை மனி நேரமாவது நல்ல கருத்துள்ள நீதி நெறி மற்றும் சமுதாய முன்னேற்றத்திற்கான நூல்களைப் படிப்பபோம். நாம் படிப்போம். நம் நண்பர்களை படிக்க வைப்போம்!!. நமது இந்த இளைய
உணர்வுள்ளதாய் !                                                                                                         இளைய சுமுதாயமே! உமது கைகள் வலிமையுள்ளதாக மாறட்டும்! வாரி உண்பதற்கல்ல வறுமையை ஓங்கி அடிக்கத்தான்!     உமது கால்களில் வலிமை வளரட்டும்! பிறரை எட்டி உதைக்க அல்ல! நாட்டின் உயர்வுக்கு உழைக்கத்தான்!     கண்கள் ஒளிபெறட்டும்! கன்னியரை சுற்றி அலைய அல்ல! சுயநலக் கயவர்களை சுட்டெரிக்கத்தான்!     நாக்கு வலிமையடையட்டும்! வசைபாட அல்ல! வஞ்சகரை வரித்துரைக்கத்தான்!     உணர்ச்சிகள் உணர்வுள்ளதாகட்டும்! உணர்ச்சிவசப்பட அல்ல உம்மையும் உணர்ந்து கொண்டு பிறரையும் உணர்த்தி வாழத்தான்!     அனுதின‌மும் ஆனந்தமாய் வாழ்ந்திட‌ வாழ்த்துக்க‌ளோடு ,    த.கிருஷ்ணகுமார்  நன்றி.... கொல்லிமலை ஆனந்தன்....
                                       எதை நீ அதிகமாக விரும்புகிறாய் ?                    ஓர் இளைஞன் சாக்ரடீஸிடம் வந்து வெற்றிக்கான இரகசியத்தைப் பற்றிக் கேட்டான். அதற்கு சாக்ரடீஸ் மறுநாள் காலை ஆற்றங்கரைக்கு வருமாறு கேட்டுக் கொண்டார். மறுநாள் காலை ஆற்றங்கரையில் இருவரும் சந்தித்துக் கொண்டனர். சாக்ரடீஸ் அந்த இளைஞனை ஆற்றை நோக்கி உள்ளே வரும்படி கேட்டுக் கொண்டார். கழுத்தளவு நீர் வரை உள்ளே வந்தவுடன் அந்த இளைஞனை நீரினுள் வைத்து அமுக்கினார். அவன் வெளியே வர முயற்சி செய்தான். ஆனாலும் அவனை அப்படியே அமுக்கியவாறு அவனது முகம் நீல நிறமாக மாறும் வரை வைத்திருந்தார். சற்றுப் பொறுத்து அவனது தலையை நீரினுள்ளிருந்து வெளியே இழுத்தவுடன் அந்த இளைஞன் செய்த முதல் வேலையே தன்னால் இயன்ற அளவு காற்றை மீண்டும் மீண்டும் உள்ளிழுத்தான். சாக்ரடீஸ் அவனிடம்  “நீ நீருக்குள் இருந்த போது நீ எதை அதிகம் விரும்பினாய்?”  என்று கேட்டார். அந்த இளைஞன் “காற்று”  என்று பதிலளித்தான்.         சாக்ரடீஸ்,  “வெற்றியின் இரகசியமே அது தான் .நீ எவ்வளவு அதிகமாக காற்றை விரும்பினாயோ அது போன்றே வெற்றியையும் விரும்பினால் உனக்கு அது கிட்டும்”  என்று ச
                                               கடின உழைப்பு                                                                                                                                     கடின உழைப்பு என்பது ஒரு நல்ல தொடக்கமும், முடிவுமாகும். கடினமாக ஒருவர் உழைத்தால், அவர் மகிழ்ச்சியாக இருப்பார்; அவ்வாறு அவர் மகிழ்ச்சியாக இருந்தால், அவர் கடினமாக உழைப்பார். சிறந்த கருத்துகளை நாம் செயல்படுத்தாதவரை அவற்றால் பலனில்லை. மனவலிமையும் கடின உழைப்பும் இல்லையென்றால் எப்பேற்பட்ட திறமையும் வீணாகிவிடும்.     உழைப்பின் உதாரணங்கள்: ஒரு வாத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அது நீரின் அடியில் ஓயாது காலால் உதைத்துக் கொண்டே இருக்கும். ஆனால் நீரின் மேல் அமைதியாகவும், சீராகவும் காணப்படும். ஒரு பறவையைய் எடுத்துக் கொள்ளுங்கள். இயற்கை பறவைகளுக்கு உணவைத் தருகிறதே தவிர அவற்றை அதன் கூடுகளுக்கு கொண்டு செல்வதில்லை. பறவை காலை முதல் மாலை வரை அலைந்தே அதன் இரையைத் தேடுகிறது. மில்ட்டன் தனது ‘பாரடைஸ் லாஸ்ட்’ என்ற காவியத்தை எழுதுவதற்காக தினந்தோறும் அதிகாலை நான்கு மணிக்கே எழுந்து விடுவாராம். 'வெப்ஸ்டர்ஸ் அகராதியைய்’ தொகுப்
                               நாகரிகக் கோமாளிகள் - கணினி  மென்பொறியாளர்கள் 5 ரூபாய் கொடுத்து பேருந்தில் செல்வதற்கு 40 ரூபாய் கொடுத்து ஆட்டோவில் செல்வார்கள். சூடாகப் பருக வேண்டிய தேநீரை "cold coffee"என்று சில்லெனப் பருகுவார்கள். சூடாக சாப்பிட வேண்டிய உணவை AC அறையில் உண்பார்கள்.  சாலையைக் கடக்கும் நண்பனை பார்த்து "hai" சொல்வது போல் பெற்றவரையும் கணவன்/மனைவி, பிள்ளைகளை  தினமும் ஓரிரு வார்த்தைகள் மட்டுமே பேசிக்கொள்வார்கள். வேலைப்பளு என்று கூறிக்கொண்டு வார இறுதியை மதுக்கோப்பையுடன் முடிப்பார்கள்... சொந்த மண்ணில் இருந்து கொண்டு  அந்நியனுக்கு பணிசெய்து அடிமைகளாக இருக்கும் இவர்களுக்கு  "நாகரிகக் கோமாளிகள்"  என்ற பெயர்  சரியானது தான்.. எங்கையோ  படித்தது
  முயலாமை                  நாமெல்லோரும் ஆமை மற்றும் முயல் கதையை நன்கு அறிவோம். முயல் தனது வேகத்தைப் பற்றி தற்பெருமை அடித்துக் கொண்டது. அது ஆமையை போட்டிக்கு அழைத்தது. ஆமையும் அந்த சவாலை ஏற்றுக் கொண்டது. ஆமை ஒரே சீராக போய்க் கொண்டிருந்தது. முயலோ வேக வேகமாக ஓடி ஆமையைத் தனக்குப் பின்னால் வெகுதூரம் விட்டு முன்னேறியது. அது, தான் போட்டியை நிச்சயமாக வென்று விடுவோம் என்ற தன்னம்பிக்கையில் ஒரு சிறு தூக்கம் போடலாம் என்று முடிவெடுத்தது. அது கண்விழித்துப் பார்த்தபோது, போட்டி ஞபாகத்திற்கு வரவே உடனே ஓடத்துவங்கியது. ஆமை ஏற்கனவே இறுதிக் கோட்டை அடைந்து வெற்றி பெற்று விட்டதைத்தான் பார்க்க முடிந்தது. சீரான தொடர்ச்சியான முயற்சிக்கு கட்டுப்பாடு தேவை .  சீரற்ற குறிக்கோளற்ற முயற்சியை விட இது முக்கியமானதாகும்.            நகைச்சுவையால் மக்களின் மனங்களில் சிறந்த கருத்துக்களை விதைத்து, சிரிப்பு என்னும் பயிரை வளர்த்தவர் கலைவாணர் என்ற சிறப்பு பட்டத்தை பெற்ற  திரு. என். எஸ். கிருஷ்ணன்  அவர்கள். கிருஷ்ணன் அவர்கள் இந்த முயல், ஆமையை இவ்வாறு பள்ளி மாணவர்களுக்கு கூறுகிறார். முயல், ஆமையில் எது ஜெயித்தது என்று பள்ளி மாணவர்க
                                           ஞானியின் பொறுமை கங்கை ஆற்றில் குளித்துவிட்டு கரையேறிய ஞானி ஒருவர் மீது வெற்றிலை பாக்கு எச்சிலை துப்பினான் முரடன் ஒருவன். ஞானி வருத்தமின்றி மீண்டும் கங்கையில் நீராடி கரையேறினார். மீண்டும் துப்பினான். இவ்வாறு ஒருமுறை இரண்டு முறை அல்ல நூறு முறை துப்பினான். ஞானிக்கு கோபமோ, துயரமோ துளி கூட இல்லை. அவர் நூறு முறை நீராடினார். முரடன் மனம் வருந்தி ஞானியின் காலில் விழப்போனான். ஞானி தடுத்தார். “முரடனே... நானல்லவா உன்னை வணங்க வேண்டும். ஒரே நாளில் இந்த புனித கங்கையில் நூறு முறை நீராடுவது நடக்கக் கூடிய காரியமா? உன்னால்தான் அது முடிந்தது. உனக்கு நான் தான் மிகவும் நன்றி சொல்ல கடமைப் பட்டிருக்கிறேன்” என்றார் ஞானி. “சுவாமி… என்னை மன்னிக்க வேண்டும். இந்த ஊரில் உள்ள ஒரு செல்வர் தங்கள் புகழைப் பொறுக்காது என்னைத் தூண்டிவிட்டார். நீங்கள் கோபம் வந்து என்னைத் திட்டுவீர்கள் திட்டினால் உங்களை கட்டிப் பிடித்து மண்ணில் புரண்டால் உங்கள் பெயர் கெடும். அப்படி நடந்தால் பொன் தருகிறேன் என்றார் செல்வந்தர். அந்தப் பொன்னுக்கு ஆசைப்பட்டு இப்படி நடந்து கொண்டு விட்டேன்” என்று கூறிக் க
                                                  செய்யும் செயலில் கவனம்                     ஒரு ஜென் மத குருவிடம் சீடன் ஒருவன்  “தங்களுடைய கொள்கை என்ன என்று  கேட்டார்?”.   குருவின் பதில்… “பசி எடுத்ததால் சாப்பிடுவது, தூக்கம் வந்தால் தூங்குவது”. சீடர் மறுபடியும் இவ்வாறு கேட்டார். “பசித்தால் புசிப்பது, உறக்கம் வந்தால் உறங்குவது” இதைத்தான் எல்லோரும் செய்கிறார்களே என்றார். ஞானி சிரித்தார். மற்றவர்களுக்கும் எனக்கும் வேறுபாடு உள்ளது. நீங்கள் சாப்பிடும் போது உங்கள் மனம் சாப்பாட்டில் இருக்காது. அங்கும் இங்குமாக அலைபாயும். எதையோ நினைத்துக் கொண்டு, பேசிக் கொண்டு சாப்பிடுவீர்கள். நான் சாப்பிடும் போது சாப்பிட மட்டும் செய்கிறேன், வேறு எந்த சிந்தனையும் கிடையாது. நீங்கள் தூங்கும் போது உங்களது மனம் தூக்கத்தில் இல்லை, கவலையில், சிந்தனைகளில் மற்றும் குழப்பத்தில் அலைகிறீர்கள். ஆனால் தூக்கத்தின் போது நான் தூங்க மட்டுமே செய்கிறேன்.  “செய்வதைச் சரியாகச் செய்வதே யோகம்”  என்று கீதை கூறுகிறது.   செய்யும் தொழிலில் ஒன்றிவிடும் போது, அது தியானமாகி விடுவதோடு செய்யப்படுவதும் முழுமையாக அமைந்து விடுகிறது. அத்துடன் ச
                                         குழந்தையின் ஞானம்                                                                    மாலை வேலையில் சுபி ஞானி ஒருவர் ஊர் வழியே சென்று கொண்டிருந்தார். அப்பொழுது குழந்தை ஒன்று விளக்கோடு கோயிலுக்கு சென்று கொண்டிருந்தது. அந்த ஞானி குழந்தையைய் மறித்து “இந்த விளக்கிற்கு ஒளி எங்கிருந்து வந்தது?” என்றார். நீர் தான் விளக்கேற்றினீர் என்றது குழந்தை. நான் தான் விளக்கை ஏற்றினேன் ஆனால் ஒளி எங்கிருந்து வந்தது என்று தெரியாது என்றார் ஞானி. பின் குழந்தை விளக்கை ஊதி அனைத்தது. உங்கள் முன்னே ஒளி மறைந்துவிட்டது இப்பொழுது சொல்லுங்கள் “ஒளி எங்கே மறைந்தது” என்று பிறகு “ஒளி எங்கிருந்து வந்தது” என்று நான் கூறுகிறேன் என்றது குழந்தை. அந்தக் குழந்தையின் காலில் விழுந்தார் ஞானி. இனி அத்தகைய கேள்வியைய் கேட்பதில்லை என உறுதியளித்ததர்.           தான் பதிலளிக்க முடியாத கேள்வியைக் கேட்பது முட்டாள்தனம். குழந்தையிடம் மன்னிப்புக் கேட்டு ஒளி எங்கிருந்து வந்தது என்று தெரியாது என்றார்.“விளக்கை விடு” எனக்கு நல்லதே நினைவு படுத்தினாய். என் விளக்கில்(உடல்) அது எங்கு மறையும் என்பதும் தெரியாது.
                                                     ஆன்மா                                                                                                         திருமூலர் தனது திருமந்திரத்தில் மனித உடலிலும், உடலுக்கு அப்பாலும் உள்ளது ஆன்மா ஒன்றே என்று கூறுகிறார். இதனை  “கூடு விட்டுக் கூடு பாயக் கூடியது”  என்றும் கூறுகிறார். அதாவது, ஒரு பிறவியில் நற்பெயர் எடுத்தவன் தனது உடலால் மட்டுமே இறக்கிறான். ஆனால் அவனது ஆன்மாவானது மற்றொருவரின் உடலில் ஏறி இந்த உலகிற்கு நல்லவற்றை செய்து கொண்டே தான் இருக்கிறது. ‘ பாலை’  வைத்து ஆன்மாவை இவ்வாறு விளக்குகிறார்  சொல்வேந்தர் சுகிசிவம்  அவர்கள். பாலுக்குள் நெய் மறைந்திருக்கிறது. ஆனால் அது நம் கண்ணுக்குத் தெரிவதில்லை. பாலை நாம் எதுவும் செய்யாமல் அப்படியே வைத்து விட்டால் அது மறுநாளே கெட்டுப் போய்விடும். சரி, இந்தப் பாலை அப்படியே வைக்காமல் அதைக் காய்ச்சி உறை ஊற்றி வைத்துவிட்டால் மறுநாள் அது கெட்டுப் போகாமல் தயிராக வாழ்ந்து கொண்டிருக்கும்.தயிரைக் கடைந்து மோரும் வெண்ணையுமாக பிரித்துவிட்டால், அதே பால் அடுத்த நாளும் உருவகங்கள் மாறி வாழ்ந்து கொண்டிருப்பதாகிறது. வெ
பிறரைப் பற்றி எண்ணுதல் ஒரு நாள் பத்து வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் ஐஸ் கிரீம் கடைக்குச் சென்றான். ஒரு இருக்கையில் உட்கார்ந்தான். ‘ஐஸ் கிரீம் கோன் எவ்வளவு?’ என்று கடை யில் உள்ள பணிப்பெண்ணிடம் கேட்டான். அவள் பத்து ருபாய் என்றாள். தன் கையில் இருந்த சில்லரைக்காசுகளை எண்ணத் தொடங்கினான். பிறகு அவன் ‘ஒரு சிறிய அளவு ஐஸ் கிரீம் எவ்வளவு?’ என்று கேட்டான். அவள் பொறுமையிழந்து “எட்டு ரூபாய்” என்று பதிலளித்தாள். அந்தச் சிறுவன் ‘எனக்கு ஒரு சிறிய ஐஸ் கிரீம் கப் வேண்டும்’ என்றான். அவனுக்கு ஐஸ் கிரீம் கிடைத்தது, தொகைக்கான சீட்டும் கிடைத்தது. பிறகு, பணம் கொடுத்துவிட்டு வெளியேறினான். அந்த வெற்றுத்தட்டை எடுக்க வந்த பணிப்பெண், மனமுருகிப் போனாள். அந்தத் தட்டுக்கு அடியில் ஒரு ரூபாய் நாணயம் அந்தப் பெண்ணின் சேவைக்காக வைக்கப்பட்டிருந்தது. அந்த சிறுவன் ஐஸ் கிரீமை வாங்குவதற்கு முன்னால் அந்தப் பெண்ணின் சேவைக்கு ஊதியம் கொடுக்க வேண்டும் என்று எண்ணி இருந்திருக்கிறான். அவன் தனது உணர்வையும், அக்கறையையும் காட்டி விட்ட
                                                 ஆசையின் அழிவு                                                                                                   இந்த உலகில் பிறந்த உயிரினங்களில் சிறு பூச்சி முதல் மனிதன் வரை ஆசைக்கு அடிபணியாத உயிரினங்களே இல்லை என கூறலாம். அவ்வாறு ஆசைக்கு அடிப்பட்ட நாம் ஏதாவது ஒரு வகையில் நமது வாழ்க்கையை தொலைக்கிறோம். இதில் விலங்கினங்கள் ஏதாவதொரு (தனது) புலன்களின் ஆசையினால் மட்டுமே தனது வாழ்க்கையை முடித்துக் கொள்கின்றன. ஆனால் ஆறறிவு படைத்த மனிதன் ஐம்புலன்களாலும் வாழ்க்கையை தொலைக்கின்றான். உதாரணமாக,  மீன்  எதனால் அழிகிறது? தூண்டில் புழுவுக்கு ஆசைப்பட்டு வாயை திறந்து புழுவைச் சாப்பிடுகிறது. மரணம் மீனைச் சாப்பிடுகிறது.   வண்டு  எதனால் அழிகிறது? நாசியன் நறுமணத்தால் பூவில் மயங்கிக்கிடக்கிறது. பூவோ கருவுற்று, காயாகும் நோக்கில் இதழ்கழை மூடி விடுகிறது. மூங்கிலைத் துளைக்கும் வலிய வண்டு, நாசியின் நறுமணச் சுவையில் மயங்கி மெல்லிய பூவைக் கூடத் துளைக்க முடியாமல் உள்ளேயே கிடந்து சாகிறது. அசுணமா  என்றொரு பறவை. நல்ல இசை என்றால் அதற்கு நாட்டம். வேடுவர்கள் புல்லாங்குழல் எட
  கடின உழைப்பு                                                                                                    மே 22, வெள்ளி 2009                                    கடின உழைப்பு என்பது ஒரு நல்ல தொடக்கமும், முடிவுமாகும். கடினமாக ஒருவர் உழைத்தால், அவர் மகிழ்ச்சியாக இருப்பார்; அவ்வாறு அவர் மகிழ்ச்சியாக இருந்தால், அவர் கடினமாக உழைப்பார். சிறந்த கருத்துகளை நாம் செயல்படுத்தாதவரை அவற்றால் பலனில்லை. மனவலிமையும் கடின உழைப்பும் இல்லையென்றால் எப்பேற்பட்ட திறமையும் வீணாகிவிடும்.     உழைப்பின் உதாரணங்கள்: ஒரு வாத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அது நீரின் அடியில் ஓயாது காலால் உதைத்துக் கொண்டே இருக்கும். ஆனால் நீரின் மேல் அமைதியாகவும், சீராகவும் காணப்படும். ஒரு பறவையைய் எடுத்துக் கொள்ளுங்கள். இயற்கை பறவைகளுக்கு உணவைத் தருகிறதே தவிர அவற்றை அதன் கூடுகளுக்கு கொண்டு செல்வதில்லை. பறவை காலை முதல் மாலை வரை அலைந்தே அதன் இரையைத் தேடுகிறது. மில்ட்டன் தனது ‘பாரடைஸ் லாஸ்ட்’ என்ற காவியத்தை எழுதுவதற்காக தினந்தோறும் அதிகாலை நான்கு மணிக்கே எழுந்து விடுவாராம். 'வெப்ஸ்டர்ஸ் அகராதியைய்’ தொகுப்பதற்காக நோவா வெப்ஸ்டர் 3
Image
Image
Image